உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

ஜோகோவிச் விலகல்ஏதென்ஸ்: கிரீசில் நடந்த ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் செர்பியாவின் ஜோகோவிச் 4-6, 6-3, 7-5 என இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தி கோப்பை வென்றார். ஏ.டி.பி., ஒற்றையரில் 101வது பட்டம் வென்ற ஜோகோவிச், தோள்பட்டை காயத்தால், இத்தாலியில் நடக்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக முசெட்டி வாய்ப்பு பெற்றார்.வட கொரியா கலக்கல்ரபாட்: மொராக்கோவில், பெண்களுக்கான (17 வயது) உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடந்தது. இதன் பைனலில் வட கொரியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் வட கொரியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.தென் கொரியா அபாரம்அம்மான்: ஜோர்டானில் நடந்த பெண்களுக்கான (16 வயது) ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் 2வது சீசனுக்கான பைனலில் தென் கொரியா அணி 3-2 (26-28, 25-21, 25-11, 19-25, 15-13) என்ற கணக்கில் சீனதைபே அணியை வீழ்த்தி முதன்முறையாக கோப்பை வென்றது.அயர்லாந்து முன்னேற்றம்அல் ரய்யான்: கத்தாரில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் அயர்லாந்து அணி 2-1 என, உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த அயர்லாந்து, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.எக்ஸ்டிராஸ்* ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த நியூ சவுத் வேல்ஸ் ஓபன் ஸ்குவாஷ் பைனலில் இந்தியாவின் ராதிகா சீலன் 2-3 (8-11, 3-11, 11-4, 12-10, 10-12) என கனடாவின் இமான் ஷாஹீனிடம் தோல்வியடைந்தார்.* அமெரிக்காவில் நடக்கும் செயின்ட் ஜேம்ஸ் எக்ஸ்பிரஸ்சன் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதியில் இந்திய வீரர் வீர் சோட்ரானி 3-0 (11-8, 11-8, 11-4) என அமெரிக்காவின் டிமோதி பிரவுனெல்லை வீழ்த்தினார்.* பிரிமியர் லீக் 'டி-20' தொடருக்கான லக்னோ அணியின் 'பீல்டிங்' பயிற்சியாளராக, இந்தியாவின் அபய் சர்மா 56, நியமிக்கப்பட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை