உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / பாம்ப்ரி ஜோடி ஏமாற்றம்

பாம்ப்ரி ஜோடி ஏமாற்றம்

இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் பாம்ப்ரி ஜோடி தோல்வியடைந்தது.அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் கோரன்ஸ்சன் ஜோடி, பிரேசிலின் பெர்னாண்டோ ராம்போலி, ஆஸ்திரேலியாவின் பாட்ரிக் ஸ்மித் ஜோடியை எதிர்கொண்டது. 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி, 6-7 என இழந்தது. அடுத்த செட்டில் சுதாரித்த பாம்ப்ரி ஜோடி 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டைபிரேக்கர்' நடந்தது. இதை பாம்ப்ரி ஜோடி 8-10 என இழந்தது. ஒரு மணி நேரம், 50 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-7, 6-3, 8-10 என போராடி தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை