மேலும் செய்திகள்
பாட்மின்டன்: அன்மோல் அசத்தல்
10-Oct-2025
சென்னை: சென்னை ஓபன் 'டபிள்யு.டி.ஏ., 250' டென்னிஸ் தொடர் மூன்று ஆண்டுக்குப் பின் மீண்டும் சென்னையில் நடக்க உள்ளது. வரும் அக். 27 முதல் நவ. 2 வரை நடக்கும் இத்தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளின் அந்தஸ்து ('ரேங்க்') வெளியானது. இரு குழந்தைகளுக்கு அம்மா, ஜெர்மனியின் டாட்ஜனா மரியாவுக்கு 'நம்பர்-1' அந்தஸ்து தரப்பட்டது. தவிர, நடப்பு சாம்பியன், செக் குடியரசின் 20 வயது லிண்டா புருக்விர்ட்டோவா, பைனலில் பங்கேற்ற போலந்தின் மாக்டா லினெட்டே, 2024 விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறிய, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற குரோஷியாவின் டோன்னா வெகிச் (நம்பர் 69) பங்கேற்கின்றனர்.சிறப்பு அனுமதிஇந்தியா சார்பில் 16 வயது மாயா ரேவதி, சஹாஜா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா என மூவருக்கு சிறப்பு அனுமதி ('வைல்டு கார்டு') வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய கர்மான் கவுர் தண்டி, தற்போது தகுதிச்சுற்றில் பங்கேற்க உள்ளார். இரட்டையரில் மோனிகா (ருமேனியா), ஹன்டர் (ஆஸி.,) ஜோடிக்கு 'நம்பர்-1' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் அன்கிதா ரெய்னா-ராஷ்மிகா, ருடுஜா-ரியா ஜோடி களமிறங்குகிறது. இந்தியாவின் பிரார்த்தனா, அரியான்னேவுடன் (நெதர்லாந்து) இணைந்து பங்கேற்க உள்ளார்.
10-Oct-2025