உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / அரையிறுதியில் பாலாஜி ஜோடி

அரையிறுதியில் பாலாஜி ஜோடி

காக்லியரி: சாலஞ்சர் கோப்பை டென்னிசின் அரையிறுதிக்கு முன்னேறியது பாலாஜி ஜோடி.இத்தாலியில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, போர்ச்சுகலின் பிரான்சிஸ்கோ கேப்ரால் ஜோடி, இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் பெய்ஜ்மான் ஜோடியை எதிர்கொண்டது.'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை பாலாஜி ஜோடி 7-6 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டிலும் கடும் போராட்டம் நீடித்தது. முடிவில் இதையும் பாலாஜி ஜோடி 7-6 வசப்படுத்தியது. 2 மணி நேரம், 8 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாலாஜி ஜோடி 7-6, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை