| ADDED : ஜன 15, 2024 01:56 AM
செய்யூர் : செய்யூர் அருகே, விராலுார் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளரை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கடந்த 2016ல், தனிநபர் ஒருவர், வெள்ளரை கிராமத்தின் மயானம் தனக்கு சொந்தமான நிலத்தில் செயல்படுவதாகவும், அதை அகற்ற வேண்டும் எனவும், மதுராந்தகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் தீர்ப்பானது 2022ம் ஆண்டு, ஜன., மாதம் வழங்கப்பட்டது.இதில் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள மயானத்தில் அமைந்துள்ள எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை முழுதும் அகற்றி நிலத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. பின் வருவாய்த் துறை சார்பாக மயானம் அகற்றப்பட்டது. இந்நிலையில், 2 ஆண்டுகளாக மயானம் இல்லாமல் பொதுமக்கள்அவதிப்பட்டு வந்தனர்.ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் மயானம் அமைக்க, தனிநபரிடம் இருந்து ஆதி திராவிடர் நலத்துறையின் மூலமாக 55 சென்ட் இடம் வாங்கப்பட்டு. தற்போது மயானத்திற்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.