உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 1,024 மனு ஏற்பு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 1,024 மனு ஏற்பு

அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் துவங்கியது.இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மின் வாரியம் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர் துரைராஜன், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.இதில், பொதுமக்களிடமிருந்து, 1,024 மனுக்கள் வரப்பெற்றன.இதில், கடமலைப்புத்துார், பெரும்பேர்கண்டிகை பகுதிகளைச் சேர்ந்த திருநங்கையர் 10க்கும் மேற்பட்டோர், இலவச வீட்டு மனை வழங்கக்கோரி மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை