அரசு பேருந்தில் கடத்திய 170 மதுபாட்டில் பறிமுதல்
சூணாம்பேடு:சூணாம்பேடு அடுத்த கொளத்துார் சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தை மடக்கி சோதனை செய்த போது, படி அருகே இருந்த 'பார்சலில்' 750 மி.லி., அளவு கொண்ட 120 பாட்டில்கள் மற்றும் 50 குவார்ட்டர் மதுபாட்டில்கள் சிக்கின.மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, பேருந்தில் பயணம் செய்த, பயணியரின் விவரங்களை சேகரித்து, புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து, மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.