செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 3,08,170 குடும்ப தலைவிகள் பயனடைந்துள்ளனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழகத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், 2023ம் ஆண்டு செப்., 15ம் தேதி துவக்கி வைத்தார்.இத்திட்டத்தில், செங்கல்பட்டு வட்டத்தில் 33,501 பேரும், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் 31,682 பேரும், திருப்போரூர் வட்டத்தில், 27,892 பேரும் பயனடைந்து வருகின்றனர்.அதேபோல், செய்யூர் வட்டத்தில் 36,572 பேரும், மதுராந்தகம் வட்டத்தில் 50,550 பேரும், வண்டலுார் வட்டத்தில் 26,696 பேரும் பயனடைகின்றனர்.தாம்பரம் வட்டத்தில் 58,066 பேரும், பல்லாவரம் வட்டத்தில் 43,211 பேரும் என, செங்கல்பட்டு மாவட்டத்தில், மொத்தம் 3,08,170 குடும்ப தலைவிகள் பயன்பெறுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.