உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண்ணிடம் ரகளை கூவத்துாரில் 4 பேர் கைது

பெண்ணிடம் ரகளை கூவத்துாரில் 4 பேர் கைது

கூவத்துார் : கூவத்துார் பஜார் பகுதி யில், செல்வகுமார், 43, என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளாக பாத்திரக்கடை வைத்து நடத்திவருகிறார்.நேற்று முன்தினம் மாலை, கூவத்துார் அடுத்த நாவக்கால் பகுதியை சேர்ந்த ரகு, 32, மற்றும் அவரது நண்பர்களான தட்சணாமூர்த்தி, 33, விஜி, 42, நரேஷ், 33, ஆகிய நான்கு பேரும் பாத்திரக் கடைக்கு சென்று, உரிமையாளர் இல்லையா என, கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, நேற்று கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, ரகளையில் ஈடுபட்ட நான்கு பேரையும், கூவத்துார் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ