60 கிலோ குட்கா பறிமுதல்
செங்கல்பட்டு, மார்ச் 2--செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராஜகுளிப்பேட்டை பகுதியில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, இந்த பகுதியைச் சேர்ந்த அருண்குமார், 40, என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, 60 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் சிக்கின. குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.