உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்னுயிர் காப்போம் திட்டத்தில் செங்கையில் 8,059 பேர் பயன்

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் செங்கையில் 8,059 பேர் பயன்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், இன்னுயிர் காப்போம் திட்டத்தில், 8,059 பயன்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழகத்தில், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் 48 திட்டத்தை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 2021ம் ஆண்டு டிச., 18ம் தேதி துவக்கி வைத்தார்.இத்திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் எட்டு அரசு மருத்துவமனைகள், 11 தனியார் மருத்துவமனைளில் செயல்பட்டு வருகிறது.இம்மருத்துவமனைகளில், விபத்து ஏற்பட்டு, 48 மணி நேரத்திற்கான சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. இதில், 8,059 பயனாளிகள் பயன்பெற்றனர்.இவர்களின் சிகிச்சை செலவிற்கு, தமிழக அரசு சார்பில், 8 கோடியே 3 லட்சத்து 71,351 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ