உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 87 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

87 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

தாம்பரம்:வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு, அதன் உரிமையாளார்கள், அவசியம் உரிமம் பெற வேண்டும் என, தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தியது.நாய் மற்றும் பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, https://tcmcpublichealth.inஎன்ற புதிய இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியது.ஜூன், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, பொது சுகாதர பிரிவு கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மருத்துவர் குழு இணைந்து ஆய்வு செய்து, ஒரு மாத காலத்திற்குள் உரிமச் சான்று வழங்கப்படும் என தெரிவித்தது.இந்த நிலையில், புதிய இணையதளம் வாயிலாக, 463 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றை சரிபார்த்து, முதற்கட்டமாக, 87 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாநகராட்சி கால்நடை மருத்துவரை, 88257 91424 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ