உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநில கிக் பாக்சிங் 900 வீரர்கள் பங்கேற்பு

மாநில கிக் பாக்சிங் 900 வீரர்கள் பங்கேற்பு

சென்னை:தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் - 2024 போட்டி, நேற்று முன்தினம் துவங்கியது. போட்டிகள், செங்கல்பட்டு மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் நடக்கிறது.இதில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து, 900 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். போட்டிகள், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் என, மூன்று பிரிவுகளில், ஏழு வகை சண்டை பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. முதல் நாள் மாலை நடந்த துவக்க விழாவில், வேளச்சேரி காங்., - எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, மாநில கிக் பாக்சிங் சங்க துணை தலைவர் ஆர்த்தி அருண் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.'போட்டியில் தேர்வாகும் வீரர் - வீராங்கனையர், இம்மாதம் 21ம் தேதி புனேவில் நடக்க உள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்' என, போட்டி ஒருங்கிணைப்பாளரும், சங்கத்தின் பொதுச் செயலருமான சுரேஷ்பாபு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை