உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆர்ப்பாட்டம் செய்த 93 பேர் கைது

ஆர்ப்பாட்டம் செய்த 93 பேர் கைது

திருப்போரூர்:திருப்போரூரில், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், மத்திய அரசை கண்டித்து, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து, ஓ.எம்.ஆர்., சாலையில், இந்தியன் வங்கியை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.செல்லும் வழியில், பேருந்து நிலையம் அருகே, அவர்கள் அனைவரையும் திருப்போரூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே, அங்கேயே அமர்ந்து, சாலை மறியல் செய்தனர். இதையடுத்து, பெண்கள் உட்பட 93 பேரை, போலீசார் கைது செய்து, தனியார் திருமணமண்டபத்தில் வைத்து,மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை