உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சர்ச் புனரமைக்க அழைப்பு

சர்ச் புனரமைக்க அழைப்பு

செங்கல்பட்டு:சர்ச்சுகளை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கி வரும் சர்ச்சுகளை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் செய்வதற்கு, 2016 - -17ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு கலெக்டர் தலைமையிலான குழு வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் சர்ச்சுகளில் களஆய்வு நடைபெறும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவிக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை