உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ரூ.1 கோடி பொருட்கள் நாசம்

பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ரூ.1 கோடி பொருட்கள் நாசம்

பல்லாவரம்:திருநீர்மலையில் பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின; 20க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, ஓய்யாளி அம்மன் கோவில் தெருவில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான, 'மாதா பிளாஸ்டிக் கிடங்கு' இயங்கி வந்தது.அங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதற்காக, டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி, பணிபுரிந்து வந்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, கிடங்கின் பழைய பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து, திடீரென கரும்புகை வெளியேறியது.அக்கம் பக்கத்தினர் எச்சரித்ததால், அங்கு தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர்.இதற்கிடையில், தீ மளமளவென பரவி கிடங்கு முழுதும் கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து தாம்பரம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் இருந்து, தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து, தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில், கிடங்கு முழுதும் எரிந்து சாம்பலானது. அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதனால், சுற்றுவட்டார பகுதிவாசிகள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர்.இந்த விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை