உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டிரைவரை தாக்கி கார் திருடிய வழக்கு கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது

டிரைவரை தாக்கி கார் திருடிய வழக்கு கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது

பவுஞ்சூர்:சென்னை, நன்மங் கலம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 42. டிரைவர். இவர், இரு தினங்களுக்கு முன், 'இனோவா' காரில் வெங்கடேசன்என்பவரை ஏற்றிக்கொண்டு, பவுஞ்சூரில் உள்ள பாஸ்கர்என்பவருக்கு சொந்தமான பண்ணைக்கு சவாரிவந்துள்ளார்.காரை பண்ணைக்கு வெளியே நிறுத்திவிட்டு, பாலசுப்ரமணி காரில் அமர்ந்து இருந்தபோது, அவ்வழியாக வந்தமூன்று பேர் கொண்ட கும்பல், பாலசுப்ரமணியை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த காரை திருடிச் சென்றனர். இதுகுறித்து, பாலசுப்ரமணி அணைக்கட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்துவந்தனர்.அதில், கேரள மாநிலம்,பாலக்காடு அருகே திருச்சூர் பகுதியை சேர்ந்த ஷிவாஸ், 39, மற்றும் அவரது நண்பர்கள் காரைதிருடிச் சென்றது தெரியவந்தது.பின், கேரளா விரைந்த போலீசார், ஷிவாஸ் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 'இனோவா' காரை பறிமுதல் செய்து, அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷிவாஸ், செங்கல்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.மேலும், தலை மறைவாக உள்ள இருவரை, போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை