உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலாற்று பாலத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவஸ்தை

பாலாற்று பாலத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவஸ்தை

செங்கல்பட்டு ; திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென்மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய சாலை.இந்த சாலையில், செங்கல்பட்டு பழவேலி -- மாமண்டூர் பகுதியில், பாலாற்றில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த பாலத்தின் இருபுறமும், சிறு ஜல்லிக்கற்கள், மணல் துகள்கள், உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. மேலும், பாலத்தின்மீது பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:பாலத்தில் பரவிக் கிடக்கும் மணல் துகள்கள், வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. மாமண்டூர் பகுதியில், சாலையின் இருபுறமும் பெயர்ந்து, பல இடங்களில் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, இந்த சாலை மற்றும் பாலத்தின்மீது சிதறிக்கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை