உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுாரில் சாலை விபத்து வாலிபர் பலி

வண்டலுாரில் சாலை விபத்து வாலிபர் பலி

கூடுவாஞ்சேரி:வேலுார் மாவட்டம், காட்பாடி பி.கே.புரத்தை சேர்ந்தவர் பார்த்திபன், 32. இவர், நேற்று மாலை, மண்ணிவாக்கம் - -வண்டலுார் ஏரி அருகில் உள்ள பாலத்தில், இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற எய்ச்சர் சரக்கு வாகனத்தை முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனத்தின் மீது மோதினார்.இதில் துாக்கி வீசப்பட்ட பார்த்திபன், தலையில் பலத்த காயங்களுடன், உயிருக்கு போராடியபடி சாலையில் கிடந்தார்.அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.இது குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை