உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

திருப்போரூர் : பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சாலமோன், 28, மேடவாக்கத்தை சேர்ந்தவர் அய்யனார், 39, ஆகிய இருவரும், ஆக்டிவா ஸ்கூட்டரில், கார்பென்டர் வேலைக்கு, நேற்று காலை 10:30 மணிக்கு, கேளம்பாக்கம் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, மாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே, முன்னே சென்ற லாரியை முந்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்துக்குளாகினர்.இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சாலமோன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அய்யனார், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துவிசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி