உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேதகிரீஸ்வரர் கோவிலில் 28ல் ஆடிப்பூரம் துவக்கம்

வேதகிரீஸ்வரர் கோவிலில் 28ல் ஆடிப்பூரம் துவக்கம்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், அஷ்டகந்த மூலிகைகளாலான அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன் சிலைக்கு, ஆண்டு முழுதும் தினசரி பாத அபிஷேகமே நடக்கும்.ஆடி, பங்குனி மாத உத்திரம், புரட்டாசி மாத நவராத்திரி உற்சவ கால தசமி ஆகிய நட்சத்திர நாட்களில் மட்டுமே, அம்மனுக்கு முழுமையாக அபிஷேகம் செய்யப்படும்.ஆடிப்பூர உற்சவம், 10 நாட்கள் நடக்கும். இந்த உற்சவம், ஜூலை 28ம் தேதி இரவு, விநாயகர் பூஜையுடன் துவக்கப்படுகிறது.மறுநாள் காலை கொடியேற்றப்பட்டு, ஆக., 8ம் தேதி வரை உற்சவம் நடக்கிறது. அம்பாள் உற்சவருக்கு, தினசரி அபிஷேக அலங்கார வழிபாடு நடக்கிறது.ஜூலை 31ம் தேதி, அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளும் அம்பாள், வேதகிரீஸ்வரர் மலைக்குன்று கிரிவலம் செல்கிறார்.மேலும், ஆக., 4ம் தேதி, திருத்தேரில் உலா செல்கிறார். உத்திர நட்சத்திர நாளான ஆக., 8ம் தேதி, அம்பாள் மூலவருக்கு, முழு அபிஷேகம் செய்து, சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். பின், பஞ்சமூர்த்தி சுவாமியர் வீதியுலா செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை