உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெருங்களத்துார் - செங்கை பறக்கும் சாலை திட்டத்தை கைவிடுவதா: ராமதாஸ் எதிர்ப்பு

பெருங்களத்துார் - செங்கை பறக்கும் சாலை திட்டத்தை கைவிடுவதா: ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை : 'பெருங்களத்துார் -- செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டத்தை, எந்த மாற்றமும் இல்லாமல் செயல்டுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர்- ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:பெருங்களத்துார் -- செங்கல்பட்டு 27 கி.மீ., நீளத்திற்கு ஆறு வழி பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.பறக்கும் சாலை அமைக்க, 3,523 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், இத்திட்டத்தை கைவிட, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக, கிளாம்பாக்கம் முதல் பொத்தேரி வரை 7 கி.மீ., பறக்கும் சாலை அமைக்கவும், மறைமலை நகர், போர்டு கார் ஆலை, சிங்கப்பெருமாள் கோயில், மகிந்திரா சிட்டி ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது எதிர்பார்த்த பயனை அளிக்காது. ஜி.எஸ்.டி., சாலையில் தினமும் ஒன்றரை கோடி வாகனங்கள் செல்கின்றன.விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 50சதவீதம் வரை அதிகரிக்கின்றன.எனவே, எதிர்கால போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெருங்களத்துார் - - செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டத்தை, எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும். அதற்கான செலவை,மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்