| ADDED : ஆக 12, 2024 03:36 AM
தாம்பரம் : தாம்பரத்தில் மேற்கு, -கிழக்கு தாம்பரங்களை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள், இவ்வழியே செல்கின்றன.முடிச்சூர் சாலை வழியான மேம்பாலத்தின் கீழ் பகுதியில், பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அத்துறையினர் உரிய அனுமதி வழங்காததால், அங்கு அணுகு சாலை அமைக்கப்படாமல் உள்ளது.அதனால், இந்த இடத்தை ஆக்கிரமித்து, பூ மாலைகள் போடப்பட்டு உள்ளன. வாகனங்களை வரிசையாக நிறுத்தி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.அதேபோல், ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியில், தனியார் மருத்துவமனையை ஒட்டி செல்லும் அணுகு சாலையும் முழுதாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.அந்த இடத்தை ஒட்டி, போக்குவரத்து காவல் நிலையம் இருந்தும், வாகன ஆக்கிரமிப்பு களை கட்டுப்படுத்தவும், அகற்றவும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தினமும் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிரே ஒரு வாகனம் வந்தால், ஒதுங்குவதற்குக்கூட வழியில்லாமல் சிரமப்படுகின்றனர்.அணுகு சாலையில் அதிகரித்து வரும் வாகன ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.