உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழுதாகி நின்ற லாரியில் கன்டெய்னர் மோதி விபத்து

பழுதாகி நின்ற லாரியில் கன்டெய்னர் மோதி விபத்து

திருப்போரூர், கேளம்பாக்கம் - வண்டலுார் சாலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன. எனவே, தினசரி காலை, மாலை நேரத்தில் இச்சாலையில் போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்நிலையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சிமென்ட் கலவை லாரி ஒன்று வண்டலுாரிலிருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்றபோது கண்டிகை அருகே திடீரென பழுதாகி நின்றது. அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி சிமென்ட் கலவை லாரியின் மீது மோதியது. இதில் கன்டெய்னர் லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு ஒரு கி.மீ., வரை வாகனங்கள் நின்று ஊர்ந்து சென்றன.தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை