உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனியார் நிறுவன வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

தனியார் நிறுவன வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

திருப்போரூர், : திருப்போரூர் அருகே தனியார் நிறுவன வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.திருப்போரூர் அடுத்த வெங்கூரில் செயல்படும் தனியார் நிறுவன தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, 10க்கும் மேற்பட்ட வேன்கள்,செங்கல்பட்டு- - திருப்போரூர் சாலையில், அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன.இதில், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து சென்ற மூன்று வேன்களுக்கு முன் சென்ற கார், திடீரென வேகத்தை குறைத்ததால், முதலில் சென்ற வேன் காரில் லேசாக மோதிநின்றது.தொடர்ந்து வந்த இரண்டு வேன்களும், அடுத்தடுத்து மோதிக்கொண்டன.இந்த விபத்தில், ஒரு வேனின் முன் கண்ணாடி முழுமையாக உடைந்தது. வேன்களில் பயணித்த சில தொழிலாளர்களுக்கு, லேசான காயம் ஏற்பட்டது.இதனால், அப்பகுதியில் சிறிது நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ