உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்கு மாயமாவதாக குற்றச்சாட்டு

திருக்கழுக்குன்றம் ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்கு மாயமாவதாக குற்றச்சாட்டு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வட்டார ஊராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்து, வசிப்பிட பகுதிகள் விரிவடைந்து வருகின்றன. இதனால், தெருவிளக்கு பயன்பாடு மற்றும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.ஆரம்பத்தில் சாதாரண டியூப் லைட், சோடியம் விளக்கு, சி.எப்.எல்., என பயன்படுத்தப்பட்டது. மின் சிக்கனம் கருதி, தற்போது எல்.இ.டி., விளக்கு பயன்படுத்தப்படுகிறது.ஊராட்சி பகுதிகளில், 50 வாட்ஸ் எல்.இ.டி., விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன. திருக்கழுக்குன்றம் வட்டார ஊராட்சிகளில், இவ்விளக்குகள் அடிக்கடி திருடு போவதாக கூறப்படும் நிலையில், 36 வாட்ஸ் எல்.இ.டி., பல்பு பயன்பாடு அதிகரித்துள்ளது.இந்நிலையில் பட்டிக்காடு, கடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், எல்.இ.டி., பல்பு பொருத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:மக்கள் வசிக்கும் இடங்களில், 50 வாட்ஸ் எல்.இ.டி., விளக்கு பொருத்தியுள்ளோம். ஊருக்கு ஒதுக்குப்புற இடங்களில் உள்ள எல்.இ.டி., விளக்குகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்று விற்கின்றனர். 1,250 ரூபாய் விளக்கை, 500 ரூபாய்க்கு விற்கின்றனர். திருட்டை தவிர்க்கவே, ஊராட்சியின் எல்லை பகுதிகளில் மட்டும் மலிவு விலை பல்பு பொருத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ