உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உறவினர் வீட்டு முன் தீக்குளித்த முதியவர்

உறவினர் வீட்டு முன் தீக்குளித்த முதியவர்

சேலையூர்:சேலையூரை அடுத்த கவுரிவாக்கத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 65. இவருடைய மனைவியின் தங்கை கணவரான கோபாலகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். அதில் இருவருக்கும், பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தன் சொத்தை அபகரித்ததாகக் கூறி, மாடம்பாக்கம், ஜோதி நகரில் உள்ள கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன், முருகேசன் நேற்று மாலை, உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.கருகிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை, அங்கிருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ