மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago
சென்னை:சென்னை, வடக்கு கடற்கரை, ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 39; பழைய மாமல்லபுரம் சாலையில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை கடையை திறக்க, வீட்டில் இருந்து காரில், உறவுக்கார பெண் ஒருவருடன் சென்றார்.பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே, முன்னால் சென்ற கார் ஒன்று வழிவிடாததால், மணிவண்ணன்,'ஹாரன்' அடித்துள்ளார்.அப்போது, முன்னால் சென்ற காரில் போதையில் இருந்த மூவர், திடீரென காரை நிறுத்தி, மணிவண்ணனிடம் தகராறு செய்துள்ளனர்.ஒருகட்டத்தில், சட்டையை கிழித்து அவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். அங்கிருந்த போக்குவரத்து போலீசார் இவர்களை தடுத்து, இந்த சம்பவத்தை மொபைல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.உடனே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்து மணிவண்ணன், பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்த போலீசார், இதில் தொடர்புடைய திருவொற்றியூரைச் சேர்ந்த கோபி,50, சுடலையாண்டி,50, பா.ஜ., நிர்வாகி கார்த்திக்ராஜா, 46, ஆகிய மூவரை கைது செய்தனர்.இதில் கோபி, ஆயுதப்படை போலீஸ்காரராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago