மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
20 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
20 hour(s) ago
இன்று இனிதாக ... (04.10.2025) செங்கல்பட்டு
03-Oct-2025
மாமல்லபுரம்:தமிழகத்தில், பாரம்பரிய நினைவுச் சின்னம் உள்ளிட்ட வகைகளில் சுற்றுலா பகுதிகள் நிறைந்துள்ளன. சுற்றுலா வளர்ச்சியில், முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மாநில சுற்றுலா வளர்ச்சிக்கும், அதற்கு பங்களிக்கும் சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், தமிழக சுற்றுலாத்துறை, 2022ம் ஆண்டு முதல், சிறந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.தற்போது, செப்., 27ம் தேதி, சர்வதேச சுற்றுலா தின விழாவில், விருதுகள் வழங்க உள்ளது.உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண கூட்டாளர், விமான கூட்டாளர், பயணியர் தங்கும் விடுதி, உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் சிறந்து செயலாற்றுபவர், சுற்றுலா ஏற்பாட்டாளர், சுற்றுலா வழிகாட்டி, சாகச சுற்றுலா மற்றும் முகாம் தளம் ஏற்பாட்டாளருக்கு சுற்றுலா துறையின் விருதுகள் வழங்கப்பட உள்ளன.மேலும், கூட்டங்கள் ஊக்குவிப்பு மற்றும் மாநாடு அமைப்பாளர், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர், தமிழகம் குறித்த சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர கருத்து, சுற்றுலா, விருந்தோம்பல் குறித்தான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில், சிறந்த முதன்மை நபர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட உள்ளது.விருது பெற விரும்புவோர், ஆக., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.சுற்றுலாத் துறையின் www.tntourismawards.comஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்களாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
20 hour(s) ago
20 hour(s) ago
03-Oct-2025