உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஒன்றிய தலைவர் மீது புகார் விசாரணை அதிகாரி நியமனம்

ஒன்றிய தலைவர் மீது புகார் விசாரணை அதிகாரி நியமனம்

சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியத்தில், 43 ஊராட்சிகள் உள்ளன. 17 ஆண் ஊராட்சி தலைவர்கள், 26 பெண் ஊராட்சி தலைவர்கள் உள்ளனர்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஏழுமலை, சித்தாமூர் ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து, தமிழக முதல்வர், தமிழக கவர்னர், தேசிய மகளிர் ஆணையம், உயர் நீதிமன்ற பதிவாளர், தமிழக தலைமை செயலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு, சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளின் பெண் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.இந்த மனுவில், 21 பெண்கள், 9 ஆண்கள் உட்பட, 30 ஊராட்சி தலைவர்களின் சீல் வைத்து கையெழுத்திட்டு அனுப்பினர்.சித்தாமூர் ஒன்றிய குழு தலைவர் மீது எழுந்துள்ள அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊராட்சி தலைவர்களின் பணிகளில் தலையீடு செய்தல் குறித்த புகார்கள் முன்வைக்கப்பட்டன.இந்த மனுவை விசாரிக்க, செங்கல்பட்டு மாவட்ட தணிக்கை உதவி இயக்குனர் பாஸ்கர் என்பவரை நியமனம் செய்து, புகார் மனு குறித்து விசாரனை செய்து, இரண்டு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி