உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை மருத்துவமனை அவலம் இணை இயக்குனருக்கு அர்ச்சனை

மாமல்லை மருத்துவமனை அவலம் இணை இயக்குனருக்கு அர்ச்சனை

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வு துறை இணை இயக்குனர் தீர்த்தலிங்கத்துடன், கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்தார்.சிகிச்சைக்கு எத்தனை நோயாளிகள் வந்தனர், சிகிச்சை அளிக்கப்பட்ட விபரம், மருந்து வழங்குவது, இருப்பு, அத்தியாவசிய மருந்துகள் உள்ளதா என, அப்போது அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.டாக்டர்கள், பிற ஊழியர்கள் விபரம், பற்றாக்குறை குறித்தும் விசாரித்தார். அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட கருவிகள் இல்லாதது குறித்து டாக்டர்கள் அப்போது முறையிட்டனர்.அதுகுறித்து முன்னதாகவே தெரிவிக்காதது குறித்தும், மருத்துவ கருவிகள், தேவையான ஊழியர்களை கேட்டு பெறாதது குறித்தும், இணை இயக்குனரிடம் கடிந்து கொண்டார். பின், அது குறித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தினார்.சித்த மருத்துவ பிரிவில், மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என கேட்டறிந்தார். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனைகள், தேசிய சுகாதார இயக்க வழிகாட்டுதலின்படி செய்யப்படுகிறதா என, ஊழியர்களிடம் விசாரித்தார்.மருத்துவ அறைகள், மருத்துவமனை வளாகம் முறையான பராமரிப்பின்றி அவலத்தில் உள்ளது குறித்தும், கட்டட சுவர்களில் ஏற்பட்ட விரிசல்கள் பற்றி தெரிவிக்காதது குறித்தும், மருத்துவமனை நிர்வாகிகளை கடுமையாக கண்டித்தார்.அதன்பின், முட்டுக்காடு படகு குழாம் மற்றும் கரிக்காட்டுக்குப்பம் துாண்டில் வளைவு ஆகிய பகுதிகளில் நடந்துவரும் பணிகளை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ