உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் - லாரி மோதி விபத்து கோவளத்தில் இருவர் பலி

பைக் - லாரி மோதி விபத்து கோவளத்தில் இருவர் பலி

திருப்போரூர்:ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஷ், 19. இவர், படூர் தனியார் கல்லுாரியில், பி.இ., கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரின் நண்பர் ஷேக்லால் பாஷா, 27, அதே கல்லுாரியில் பணியாற்றி வந்தார்.இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, ராயல் என்பீல்டு பைக்கில், கோவளத்திலிருந்து கேளம்பாக்கம் நோக்கிசென்றனர். அப்போது, பகிங்ஹாம் கல்வாய் அருகே சென்றபோது, எதிரே வந்த ஸ்விப்ட் டிசைர் காரில் எதிர்பாராதவிதமாக பைக் உரசியது.இதில் நிலைதடுமாறிய பைக், காருக்கு பின் வந்த லாரி மீது மோதியது. அதில், தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும், சம்பவஇடத்திலேயே பலியாகினர்.தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இருவரின் சடலத்தையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, கார் மற்றும் லாரி ஓட்டுனர்களிடம் விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ