உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி சிக்னலில் தடுப்புகள் நெல்லிக்குப்பம் பயணியர் அவஸ்தை

கூடுவாஞ்சேரி சிக்னலில் தடுப்புகள் நெல்லிக்குப்பம் பயணியர் அவஸ்தை

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலை, கூடுவாஞ்சேரி சிக்னலில், ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, இரும்பு தடுப்புகள் பயன்படுத்தி அடைக்கப்பட்டிருந்தது.அதனால், நந்திவரத்தில் இருந்து மாடம்பாக்கம், ஆதனுார் செல்லும் பயணியர் அவதிப்பட்டனர். சாகை விரிவாக்கப் பணி முடிந்தும், இன்னும் தடுப்புகள் அகற்றப்படவில்லை.இந்நிலையில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி துணைத் தலைவர் லோகநாதன், அமைச்சர் அன்பரசனிடம், கூடுவாஞ்சேரி சிக்னலில் உள்ள தடுப்புகளை அகற்றி, நெல்லிக்குப்பம் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, மனு அளித்துள்ளார்.மேலும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலை, கூடுவாஞ்சேரி சிக்னலில் இருந்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையம், மாடம்பாக்கம், ஆதனுார் மற்றும் தாம்பரம் நோக்கி வாகனங்கள் சென்று வந்தன.சாலை விரிவாக்கப் பணிக்காக, அந்த சிக்னலில் இரும்ப்பு தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. தற்போது, சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து விட்டன.ஆனாலும், இரும்பு தடுப்புகள் இன்னும் அகற்றப்படவில்லை. அதனால், அவ்வழியே செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் ஒரு கிலோமீட்டர் துாரம் சென்று, இந்த சாலைக்கு திரும்ப வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே, இரும்பு தடுப்புகளை அகற்றி, மீண்டும் நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்தை அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகராட்சிக்கு உட்பட்ட குடிசை பகுதிகளில், அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். நந்திவரம் - -நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பள்ளி அருகில் வேகத்தடை அமைத்து, வாகனங்கள் சீராக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், மிகவும் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் உள்ளன. அவற்றையும் சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அன்பரசன், பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை