உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேருந்து நடத்துனரின் பணப்பை ஆட்டை

பேருந்து நடத்துனரின் பணப்பை ஆட்டை

சென்னை:துரைப்பாக்கம் நேரு நகரைச் சேர்ந்தவர் வினோத்,38. இவர், அடையாறு போக்குவரத்து பணிமனையில், தடம் எண் '29சி' பேருந்தில் நடத்துனராக உள்ளார்.பெசன்ட்நகர் - பெரம்பூர் வழித்தடத்தில் சென்று வரும் இப்பேருந்து, நேற்று முன்தினம் இரவு, பெரம்பூர் பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.தேநீர் சாப்பிட எண்ணிய வினோத், டிக்கெட் மற்றும் பணம் வைத்திருந்த பையை, ஓட்டுனர் இருக்கையின் கீழே வைத்து விட்டுச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, பணப்பை காணாமல் போயிருந்தது.அந்த பையில், 14,000 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட், 500 ரூபாய், வங்கி 'டெபிட் கார்டு' ஆகியவை இருந்துள்ளன. இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். பணப்பையை திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை