உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதியவரிடம் செல்போன் பணம் பறிப்பு

முதியவரிடம் செல்போன் பணம் பறிப்பு

கூடுவாஞ்சேரி, : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சி அருங்கால் பகுதியில் வசிப்பவர் மதிவாணன், 65, இவர், நேற்று காலை இருசக்கர வாகனத்தில், ஊரப்பாக்கத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அருங்கால் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக வரும் போது, மர்மநபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் 1,000 ரூபாயை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ