உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கீழாமூர் பழனியம்மன் கோவிலில் தேர் திருவிழா

கீழாமூர் பழனியம்மன் கோவிலில் தேர் திருவிழா

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே கீழாமூர் கிராமத்தில் உள்ள கிராம தேவதையான பழனியம்மனை அழைத்து வருதல், கங்கை அம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா மற்றும் பழனியம்மன் தேர் திருவிழாவும், வசந்த உற்சவமும் இன்று முதல் செவ்வாய்கிழமை வரை நடக்கிறது.மதுராந்தகம் அருகே கீழாமூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை பழனியம்மன் அழைப்பு, இன்று நடைபெறுகிறது.வரும் 18ல், கங்கையம்மன் பூங்கரகம் திருவீதி உலா வருதல் மற்றும் மதியம் 1:00 மணிக்கு கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு, தெய்வீக நாடகம் நடைபெறும். 19-ல், பழனியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் சுவாமி திருவீதி உலா வருதல், அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் திருவீதி உலா நடைபெறுகிறது.வரும் 23ல், முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா நடக்கிறது. மறு நாள் பழனியம்மன் வசந்த உற்சவம் நடக்கிறது.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை