உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆவடியில் நாளை செஸ் போட்டி

ஆவடியில் நாளை செஸ் போட்டி

சென்னை : தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் ஆதரவில், திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், சிறுவர்களுக்கான ஒரு நாள் மாநில செஸ் போட்டி, நாளை நடக்க உள்ளது.போட்டிகள், ஆவடியில் உள்ள வேலாம்மாள் வித்யாலாயா பள்ளி வளாகத்தில் நடக்கின்றன. இதில், 8, 10, 12, 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் பெரியவருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. போட்டிகள் பிடே விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் நடக்கின்றன.வெற்றி பெறும் சிறுவர்களுக்கு கோப்பைகளும், பெரியவர்களுக்கு 42,000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.பங்கேற்க விரும்புவோர், 99414 90200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை