உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பணப் பட்டுவாடாவிற்கு புள்ளி விபரம் சேகரிப்பு தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் கட்சியினர் தீவிரம்

பணப் பட்டுவாடாவிற்கு புள்ளி விபரம் சேகரிப்பு தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் கட்சியினர் தீவிரம்

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், பிரதான கட்சி களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதால், வேட்பாளர்களின் பிரசாரம் மேலும் தீவிரமாகியுள்ளது.காஞ்சிபுரம் தொகுதி யில், தி.மு.க., வேட்பாளர்செல்வம், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், பா.ம.க., வேட்பாளர் ஜோதி, நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ் குமார் ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் கிராமம் வாரியாக, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வாரியாகபிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இது ஒருபுறம் இருக்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஒவ்வொருபகுதியிலும் உள்ளதங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு 'அசைன்மென்ட்' கொடுத்து பணியாற்றஉத்தரவிட்டுள்ளனர். அதில் முக்கிய பணியாக, தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களில், 'நம் கட்சியினர் எத்தனை பேர் உள்ளனர்' என்ற விபரத்தை கணக்கெடுத்து கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளனர்.வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு கிராமம், பேரூராட்சி, மாநகராட்சி வார்டு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், தங்கள் கட்சியினருக்கு உள்ள வாக்காளர்கள் எத்தனை பேர், அதில் ஆண், பெண்எத்தனை பேர் என கணக்கெடுக்கின்றனர்.கணக்கெடுப்பு பணி நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என, பிரதான கட்சியினர் தங்கள் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் நிர்வாகிகளுக்கு நான்கு நாள் செலவாக, 20,000 முதல் 30,000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கணக்கெடுப்பு பணி முடிந்த பின், ஒவ்வொரு பகுதியிலும், எத்தனை வீடுகளில், எத்தனை ஓட்டுக்கு பணம் கொடுக்க நேரிடும் என்ற புள்ளி விபரத்துக்காக இந்த கணக்கெடுப்பு பணியை அரசியல் கட்சியினர் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறியதாவது :ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தேர்தல் கமிஷனாலும் இவற்றை தடுக்க முடியவில்லை. இதனால், வேட்பாளர்மற்றும் அரசியல் கட்சியினர் இம்முறையும் ஓட்டுக்கு பணம் கொடுப்பர். எத்தனை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க நேரிடும் என்ற தோராய கணக்கு வேண்டும் என்பதற்காகவே, வார்டு வாரியாகவும், கிராமம், பகுதி வாரியாகவும் கட்சியினர் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.தங்கள் கட்சி ஓட்டு எத்தனை உள்ளது என்ற விபரம் அளித்தவுடன், மேலிடத்திலிருந்து பணம் வரும். அவற்றை வாக்காளர்களுக்கு ரகசியமாக 'சப்ளை' செய்ய வேண்டும். இதுதான் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்டாக தற்போது உள்ளது. காஞ்சிபுரம் தொகுதியில், 17.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 25 சதவீதம் பேர் ஓட்டளிப்பதே இல்லை. 4.5 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட வர மாட்டார்கள். மீதமுள்ள 12 லட்சம் பேரில், நாம் தமிழர், பா.ம.க., சுயேச்சை ஆகியோர் மூன்று லட்சம் ஓட்டு பெறுவர். இதுபோக, ஒன்பது லட்சம் ஓட்டுகளில், தி.மு.க., - -அ.தி.மு.க., ஆகிய இரு பிரதான கட்சியினர் யார் அதிகம் பெறப் போகிறார்கள் என்பதில் தான் போட்டியே உள்ளது. வெற்றி பெறுவதற்கு, ஐந்து லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வாய்ப்புள்ளது. இதற்காக தான், கட்சி நிர்வாகிகள் இப்போதே கணக்கெடுப்பு நடத்திவருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டு களிலும், அ.தி.மு.க., 'பூத்' கமிட்டி பொறுப்பாளர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டி யலில் உள்ள பெயர்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி 18வது வார்டு சேக்குப்பேட்டை சாலியர் தெரு, கவரைத்தெரு, நடுத்தெரு பகுதியில் நேற்று, வட்டச்செயலர் ஜி.மணி தலைமையிலான அ.தி.மு.க., வினர் வீடு வீடாக சென்று, ஒரு குடும்பத்தில் மொத்தம் எத்தனை ஓட்டுகள் உள்ளன. அதில், ஆண், பெண், முதல் வாக்காளர் யார், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர், வெளியூரில் வசிப்பவர், இறந்த வாக்காளர் என, அனைத்தையும் சரிபார்த்து வருகின்றனர்.தேர்தலில் எத்தனை ஓட்டுப்பதிவாகும்என்பதற்காகவும், ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்கவே முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

சுவர் விளம்பரம்: தி.மு.க., பணம் வினியோகம்

காஞ்சிபுரம் லோக்சபா தனித்தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் செல்வம் போட்டியிடுகிறார். இதனால், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஒரு கிளை செயலருக்கு, தலா 2,000 ரூபாய் வீதம், அனைத்து கிளை செயலர்களுக்கும், தி.மு.க., நிர்வாகிகள் நேற்று முன்தினம் பணம் வினியோகம் செய்தனர். இந்த பணத்தில், சுவர்களில் சுண்ணாம்பு அடித்து, இடம் பிடித்து, சின்னம் வரைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதேபோல், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஒரு கிளைக்கு 5,000 ரூபாயை நிர்வாகிகள் வினியோகம் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள்உள்ளதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். சுவர் விளம்பரத்திற்கு குறைவாகவே பணம் கொடுத்துள்ளதாக, கிளை செயலர்கள் புலம்பிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை