| ADDED : ஜூலை 21, 2024 07:21 AM
அமைந்தகரை, : பிரபல ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூத்த விஜிலென்ஸ் அதிகாரியான ராஜா சீனிவாசன், 63, என்பவர், அமைந்தகரை போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் கிளையில், சமீபத்தில் கணக்குகளை ஆய்வு செய்தோம்.அதில், 65 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.விசாரணையில், இங்கு பணிபுரியும் பொது மேலாளர், நிறுவனத்தின் பணத்தை எட்டு மாதங்களாக சிறுக சிறுக கையாடல் செய்திருப்பது தெரிந்தது. எனவே, நிறுவனத்தின் பணத்தை மோசடி செய்த பொது மேலாளர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என, புகாரில் குறிப்பிட்டுஇருந்தார்.