சித்தாமூர் சாலையில் உலாவும்கால்நடைகளால் அவதிசித்தாமூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நுாற்றுக்கணக்கான மக்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.பெரும்பாலானோர் தங்களது கால்நடைகளை கட்டி முறையாக பராமரிக்காததால், கால்நடைகள் கட்டுப்பாடு இன்றி சாலையில் உலா வருகின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.சாலைகளில் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.- லோ.கணபதி, செய்யூர்சாலையை ஆக்கிரமித்து கடைகள்நந்திவரத்தில் போக்குவரத்து இடையூறுநந்திவரம் அரசு மருத்துவமனை எதிரில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தம் முதல், மின் வாரிய அலுவலகம் வரை, சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.மேலும், சாலை ஓரமாக, இருசக்கர வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்தி உள்ளனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.எனவே, நகராட்சி சார்பில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ். எஸ்.கலியமூர்த்தி, நந்திவரம்.பள்ளி சுற்றுச்சுவரில் விரிசல்சீரமைக்க வலியுறுத்தல்சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் பயில்கின்றனர்.இந்த பள்ளி சுற்றுச்சுவரில், நுழைவு பகுதி அருகில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த விரிசல் பெரிதாகி, சுவர் பெயர்ந்து விழும் அபாயம் உள்ளது.எனவே, இந்த விரிசலை சரி செய்ய, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.தமிழ் அரசு, சிங்கபெருமாள் கோவில்.உடைந்த நிலையில் குடிநீர் குழாய்கூடுவாஞ்சேரியில் வீணாகும் குடிநீர்நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, முதலாவது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீவாரி நகர் பகுதியில், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குழாய் இணைப்பு உள்ளது.இந்த குழாய் சேதமடைந்து, குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. எனவே, சேதமடைந்த குடிநீர் பைப்பை சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சரவணன், அருள் நகர்.