உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆளவந்தார் குருபூஜையில் மோதல்; இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு

ஆளவந்தார் குருபூஜையில் மோதல்; இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு

மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில்,ஆளவந்தார் குருபூஜை விழா, கடந்த ஜூலை 25ம் தேதி நடத்தப்பட்டது.வன்னிய குல ஷத்ரிய சமூக சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகியான, தர்மபுரியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர், குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.அப்போது அவர் வந்த காரை, ஒரு தரப்பினர் வழிமறித்து,தமிழரசனை தாக்கி, காரின் கண்ணாடியை உடைத்ததாகக்கூறப்படுகிறது.அதன்பின், 15 பேர் கும்பல் தன்னைதாக்கியதாக, மாமல்லபுரம் போலீசில் தமிழரசன் புகார் அளித்தார்.இந்நிலையில், தமிழரசனும், அவருடன்வந்த ஐந்து பேரும், குரு பூஜையில் பங்கேற்கச் சென்ற தன்னையும், தன்னுடன் இருந்தவர்களையும் தாக்கியதாக, பா.ம.க., செங்கல்பட்டு மத்திய மாவட்டசெயலர் ஏழுமலையும் புகார் அளித்தார்.இரண்டு தரப்பினர் மீதும், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி