உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை அரசு ஐ.டி.ஐ.,யில் கழிப்பறை கட்டுமானம்

செங்கை அரசு ஐ.டி.ஐ.,யில் கழிப்பறை கட்டுமானம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் பகுதியில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது.இந்நிலையத்தை, சில தினங்களுக்கு முன், கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்தார்.அப்போது, மாணவர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திதர வேண்டும் என, தொழிற்பயிற்சி நிறுவன நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அதன்பின், சமூக பொறுப்பு நிதியில் இருந்து, இரண்டு கழிப்பறைகள் கட்ட தலா 3.50 லட்சம் ரூபாய் என, ஏழு லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி, கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பின், வளாகத்தில் கழிப்பறை கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி