மேலும் செய்திகள்
வையாவூர் சமூக நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை
28-Dec-2025
உதவி பேராசிரியர் தேர்வில் 128 பேர் ஆப்சென்ட்
28-Dec-2025
இன்று இனிதாக ... (28.12.2025) செங்கல்பட்டு
28-Dec-2025
வடமாநில தொழிலாளி லாரி மோதி பலி
28-Dec-2025
மாமல்லபுரம், : மாமல்லபுரம் பேருந்து நிலையம், ஸ்தலசயன பெருமாள் கோவிலின் முன்புறத்தில் உள்ள குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, பேருந்துகளுடன், ஆட்டோக்களும் நிறுத்தப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில், ஒரே நேரத்தில் பல பேருந்துகள் வந்து செல்கின்றன.இந்நிலையில், கோவிலின் திருத்தேர், முன்பு கோவில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டது. அதன் நிறுத்துமிடம், வாஸ்து மற்றும் ஆகம நடைமுறை காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக, இடம் மாற்றி பேருந்து நிலைய பகுதி அருகே நிறுத்தப்பட்டுள்ளது. தேரைச் சுற்றி சற்று இடைவெளி விட்டு, பாதுகாப்பு கூரையும் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கு முன், பல பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மூன்று பேருந்துகள் வரை நிறுத்தக்கூடிய இடம், தற்போது தேர் நிறுத்தப்பட்டுள்ளதால் அடைபட்டுள்ளது.ஒரே நேரத்தில், பல பேருந்துகள் வரும் சூழலில், நிலையத்தில் நிறுத்த இடமின்றி, சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. அதனால், விபத்து அபாயமும் ஏற்படுகிறது.எனவே, ஆட்டோக்கள், பேருந்துகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி நிறுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்துகின்றனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025