உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூட்டுறவு துறை ஊழியர் குறைதீர் கூட்டம்

கூட்டுறவு துறை ஊழியர் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு:கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு இணை பதிவாளர் கூட்ட அரங்கில் நேற்று காலை நடந்தது. செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பணி தொடர்பாகவும், பணியின்போது ஏற்படும் குறைகள் என, 47 மனுக்கள் பெறப்பட்டன.இந்த மனுக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விதிகளுக்கு உட்பட்டு அனைத்து மனுக் களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என, கூட்டு றவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சரக துணை பதிவாளர் உமாசங்கரி, மதுராந்தகம் சரக துணை பதிவாளர் சற்குணம், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை