உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திடீர் மாரடைப்பால் கவுன்சிலர் உயிரிழப்பு

திடீர் மாரடைப்பால் கவுன்சிலர் உயிரிழப்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 45; அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். மாமல்லபுரம் பேரூராட்சியின் இரண்டாம் வார்டு கவுன்சிலர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் வென்றார். இவரது உறவினர்கள், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராகவன், பேரூராட்சி துணை தலைவராகவும், கணேசன், அ.தி.மு.க., நகர செயலராகவும் உள்ளனர்.இந்நிலையில், உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், தி.மு.க.,வில் இணைந்து, அதன்பின், அக்கட்சியிலிருந்து விலகி, மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.நேற்று முன்தினம் மாலை, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை 4:00 மணிக்கு, மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன், மகள்கள் உள்ளனர்.இவரது இறப்பால், இரண்டாவது வார்டு காலியாக உள்ளது குறித்து, மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை அளிக்க உள்ளதாக, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ