உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கள்ளச்சாராய விசாரணை குழு செங்கையில் முகாம்

கள்ளச்சாராய விசாரணை குழு செங்கையில் முகாம்

செங்கல்பட்டு: கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக முதல் தளத்தில், கள்ளச்சாராய மரணம் குறித்து ஆய்வு செய்யும் ஒரு நபர் ஆணையம் செயல்பட, அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.இங்கு, ஓய்வு பெற்ற நீதிபதி அறை மற்றும் அலுவலக அறைகள் சீரமைக்கும் பணியில், செங்கல்பட்டு பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்த அலுவலகத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி, இணை இயக்குனர் உட்பட 10 பேர் பணிபுரிய உள்ளனர். இங்கு, கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி