உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் தண்டுமாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா, ஆண்டுதோறும் நடைபெறும்.அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருவிழா, கடந்த 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பொங்கல் வைக்கும் நிகழ்வுடன், காப்பு கட்டும் நிகழ்வு துவங்கியது.இரண்டாம் நாள் உற்சவமாக, கடந்த 20ம் தேதி மாலை 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மூன்றாம் நாள் உற்சவமான நேற்று பிற்பகல் 12:30 மணிக்கு, அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊருணி பொங்கல் வைத்தல், மாலை 6:00 மணிக்கு கும்பம் களைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.அதேபோல், திருப்போரூர் பேரூராட்சி திருவஞ்சாவடி தெருவில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவில், போலச்சேரி நாகாத்தம்மன் கோவில்களிலும், ஆடித்திருவிழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ