| ADDED : ஜூலை 13, 2024 12:53 AM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை 25 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையில் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில்உள்ள தொழிற்சாலை களுக்கு பொருட்களைஏற்றிச்செல்லும் வாகனங்கள் என, தினமும் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.ஜி.எஸ்.டி., சாலை -- ஸ்ரீபெரும்புதுார் சாலை சந்திப்பில் அதிக விபத்துகள் நடைபெற்று வருவதால், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் வாகனங்கள், 1 கி.மீ., துாரம் உள்ள மெல்ரோசாபுரம் சந்திப்பில் திரும்பிச் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்த பகுதியில் பகல் நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருவதால்,கனரக வாகன ஓட்டுனர்கள் முறையாக சென்று வருகின்றனர்.இரவு நேரங்களில் வரும் கனரக வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதுார் சாலை மற்றும் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் திரும்பி, விபத்து ஏற்படுத்தும் வகையில், எதிர் திசையில் சென்று சாலையை கடந்து செங்கல்பட்டு நோக்கி செல்கின்றனர்.இது குறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது:இரவு நேரங்களில் இந்த பகுதியை கடக்கும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கின்றன.கனரக லாரி ஓட்டுனர்கள் போக்குவரத்து போலீசாரால் அமைக்கப்பட்டு உள்ள இரும்பு பேரிகார்டு தடுப்புகளை ஓரங்கட்டி விட்டு, எதிர் திசையில் விபத்து ஏற்படுத்தும்வகையில் செல்கின்றனர்.ஏற்கனவே, இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் கூட அரசு பேருந்து -- சரக்கு வாகனம் மோதியது. இதன் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, இவற்றை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.