உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேகத்தடைக்கு வண்ணம் பூசாததால் மறைமலை நகரில் விபத்து அபாயம்

வேகத்தடைக்கு வண்ணம் பூசாததால் மறைமலை நகரில் விபத்து அபாயம்

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு உள்ள தொழிற்சாலைகளுக்கு, சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர்.இங்குள்ள திருவள்ளுவர் சாலை, பாவேந்தர் சாலை, கீழக்கரணை பிரதான சாலை உள்ளிட்டவை, ஆறு மாதங்களுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்டன. விபத்து பகுதிகளில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது.புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைகளுக்கு, வண்ணம் பூசப்படவில்லை. அதனால், வேகத்தடைகள் இருப்பது தெரியாததால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் தடுமாறி வருகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:திருவள்ளுவர் சாலையில் தனியார் பள்ளி அருகிலும், அரசு துவக்கப்பள்ளி அருகிலும், புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை, வண்ணம் பூசப்படாமலும், இரவில் ஒளிரும் விளக்குகள் பொறுத்தப்படாமலும் உள்ளதால், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.அதே போல, கீழக்கரணை சாலை வழியாக, மறைமலை நகர் சிப்காட் பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, இந்த பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசி, இரவில் ஒளிரும் பட்டைகள் அமைக்க, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை