| ADDED : மே 03, 2024 11:32 PM
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட தாசரிகுன்னத்துார் கிராமத்தில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இந்த கிராமத்தின் நடுவே பொது குளம் உள்ளது. இந்த குளம், இந்த பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, குளத்தில் தண்ணீர் வற்றி காய்ந்து காணப்படுகிறது.மேலும், துார் வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், ஆண்டுதோறும் கோடை காலத்தின் துவக்கத்திலேயே குளம் வற்றி விடுவதாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் துார் வாரி ஆழப்படுத்தப்பட்ட குளம், அதன் பின் துார் வாரப்படவில்லை. கடந்த 2019- - 20ம் நிதி ஆண்டு, ஊரக வளர்ச்சி துறை சார்பில், 12 லட்சத்து 47 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில், குளத்தின் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது.அப்போதும், குளம் ஆழப்படுத்தப்படவில்லை. எனவே, இந்த குளத்தை முழுமையாக துார் வார, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.